மதுரை வீரன் மருதநாயகம் வரலாற்றை விரிவாக தரும் நுால். இளமைக் காலம் துவங்கி துாக்கிலிடப்பட்டது வரை சொல்கிறது.
மருதநாயகம் எவ்வாறு கான்சாகிப் ஆனான் என விளக்குகிறது. புதுச்சேரி வாழ்க்கையை எடுத்துரைக்கிறது. மாஷா என்ற பெண்ணை மணந்தான் என வரலாற்றையும் பதிவு செய்துள்ளது. சிப்பாயாக படையில் சேர்ந்து தளபதியாக உயர்ந்து விளங்கியதை எடுத்துரைக்கிறது.
மதுரைக்கு கவர்னராக நியமிக்கப்பட்டு, திட்டங்கள் வகுத்து திறமையுடன் செயல்பட்டதை கூறுகிறது. வெள்ளையரை எதிர்த்து போர் புரிந்த போது, காட்டிக் கொடுக்கப்பட்டு துாக்கிலிடப்பட்டதாக கூறுகிறது. ஆற்றலுடன் விளங்கிய மருதநாயகத்தின் சமயோசித புத்திக் கூர்மையை அறிய உதவும் நுால்.
– பேராசிரியர் ரா.நாராயணன்