முதியோர் கல்வி, முறைசாரா கல்வியின் இன்றியமையாமையை கூறும் நுால். சமூக நலன்கள் பற்றிய விழிப்புணர்வு கருத்துகளை உடையது.
குடும்பக் கட்டுப்பாடு, தொழுநோய் தடுப்பு, சமூகநலக் காடுகள், சுகாதாரம், தொழிற்கல்வி, பெண் கல்வி, மனித உரிமைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி மது, வரதட்சணையை கண்டிக்கிறது.
சுகாதாரத்தை வலியுறுத்தும் விடுதலை கீதம், வளர்கல்வியை வற்புறுத்தும் நல்ல தீர்ப்பு, அனைவருக்கும் கல்வியை எடுத்துரைக்கும் போவோமா நகர்வலம் என்ற நாடகங்கள் வாயிலாக அக்கறையை வெளிப்படுத்துகிறது. சமூக ஆர்வலராக விரும்புவோர் படிக்க வேண்டிய நுால்.
– புலவர் சு.மதியழகன்