உறவுகளின் உன்னதத்தை வெளிப்படுத்தும் விறுவிறுப்பான நாவல்.
சங்கர், ஜானகி மனமொத்த தம்பதியர். குழந்தை பேற்றிற்காக சென்ற ஜானகி மனதில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. முன்பு போல் கணவர் சங்கரிடம் அனுசரணையாக இல்லை. குழந்தை மீதும் அவ்வளவாக பாசம் காட்டவில்லை.
இந்நிலையில் பதவி உயர்வில் மும்பை சென்ற கணவன், மன தடுமாற்றத்தால் ஒரு பெண் மீது காதல் கொள்கிறான்; உடல், உள்ளத்தால் கலக்கிறான். அணிந்திருந்த தங்கச் சங்கிலி காணாமல் போனதை கண்டு அவளை தவிர்க்க முயற்சிக்கிறான். ஆனால், தேடி வந்து சங்கிலியை திருப்பி கொடுக்கிறாள் அந்த பெண். வறுமையிலும் செம்மையாக வாழும் அவளுக்கு உதவ எண்ணுகிறான். ஏழ்மையின் பிடியில் அந்த பெண் பற்றி விறுவிறுப்புடன் விவரிக்கிறது நாவல்.
– புலவர் சு.மதியழகன்