காதல், அரசியல், தீவிரவாதம், கடத்தல் மற்றும் சாகசங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள த்ரில்லர் நாவல்.
திகார் சிறையில் துாக்குத்தண்டனை கைதியாக உள்ள தீவிரவாதி, ஆளுங்கட்சிக்கு நெருக்கமான பிரமுகரை கடத்துவதில் வெற்றி பெறுகிறான். அவரை விடுவிக்க பேச்சு நடக்கிறது. தீவிரவாதி தப்புகிறான். பிரமுகரை காப்பாற்ற அமானுஷ்யன் என்ற கதாபாத்திர உதவியை நாடுகிறது அரசு.
அமானுஷ்யன் சாகசங்களை மையமாக்கி கதை நகர்கிறது. தீவிரவாத இயக்கத்துக்கு எதிரான அதிரடி செயல்பாடுகள் விறுவிறுப்புடன் எழுதப்பட்டுள்ளன. உளவுத்துறை, தீவிரவாத இயக்கம், அரசு நடவடிக்கை என பரபரப்பான கதை பின்னல் ஆர்வமூட்டுகிறது. தப்பி சென்ற தீவிரவாதியின் செயல்களும் பரபரப்பு ஊட்டுகின்றன. விறுவிறுப்பு நிறைந்த த்ரில்லர் நாவல்.
– ஒளி