நேர்மையும், துணிச்சலும் உடைய உயர் அதிகாரிக்கு, புலனாய்வு பணிகளில் கிடைத்த அனுபவங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். களத்தில் சட்டத்தை அமல்படுத்தும் போது ஏற்படும் நெருக்கடிகளை விவரிக்கிறது.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் அனுார் ஜெய்ஸ்வால். தமிழகத்தில் ஐ.பி.எஸ்.அதிகாரியாக பணியாற்றினார். அப்போது கிடைத்த அனுபவங்கள் தெளிவுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசியல்வாதிகளின் அராஜகம், சட்டத்தை மீறும் அப்பட்டமான நடவடிக்கைகள், மிரட்டல், உருட்டல் எல்லாம் பதிவாகியுள்ளன.
மத்திய புலனாய்வு பிரிவில் வடகிழக்கு மாநிலத்தில் பணியாற்றிய போது நடந்த சம்பவங்களும் உள்ளன. தமிழக காவல்துறையில் உயர்மட்ட செயல்பாடுகளை பற்றிய உண்மை நிலையை அறிந்து கொள்ள உதவும் நுால்.
– ராம்