உலகின் மூன்று மாவீரர்களின் வாழ்க்கை வரலாற்றை, தக்க படங்களுடன் விவரிக்கும் நுால்.
கிரேக்கத்தில் பிறந்து இந்தியா வரை வந்த மாவீரன் அலெக்சாண்டர், உலகின் பெரும் பகுதியை ஆட்கொண்டான். பஞ்சாப் பகுதி மன்னன் போரஸின் வீரத்தைப் போற்றி, வென்ற நாட்டின் பகுதியை விட்டுக் கொடுத்தான்.
வரலாற்றில் குறிப்பிடத்தக்கவராகக் கருதப்படும் மன்னன் நெப்போலியன், ராணுவ அகாடமி ஊக்கத் தொகையில் படித்து உலகம் போற்றும் மாவீரனாய் மாறியதை விவரிக்கிறது. பேரரசர் அசோகர், வெறி கொண்டு வெற்றி பெற்றதும், ஒரே வினாடியில் அதை துறந்து, பவுத்தம் தழுவியதையும் தெளிவாக சொல்கிறது. மூன்றுமே கட்டுரைகள் என்றாலும் குறுங்கதைகள் போல் எளிமையாக உள்ளன. வரலாற்றை கதையாக கூறும் நுால்.
– ராம்