பெண் பூப்பெய்தும் காலம் துவங்கி ஒரு தலைமுறையை மேம்படுத்தும் கருத்துகள் உடைய நுால். சமூகத்தில் இருபாலருக்கும் பாலியல் குறித்த அறிதல், புரிதலை விளக்குவதுடன், பொறுப்பை உண்டாக்கும் வகையில் கருத்துகள் உள்ளன.
பிறப்பு முதல் இறப்பு வரை பெண்கள் படும் தொல்லை முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது. பெண், ஆன்மாவை எப்படி சீராகப் பேண வேண்டும் என்பது குறித்தும் கருத்துகள் உள்ளன.
கருத்தடை முறைகள், மாதவிடாய், கர்ப்ப கால பராமரிப்பு, தாய்மை, மகப்பேறு, பாலுாட்டும் கால பிரச்னை, மெனோபாஸ் பிரச்னைகளுக்கு தீர்வை அறிவுறுத்துகிறது. இருபாலருக்கும் பயன் தரும் நுால்.
– புலவர் சு.மதியழகன்