குறள் கருத்தை, மரபுக் கவிதை வடிவில் விளக்கும் நுால். எண்சீர் விருத்தப் பாடல்களில் தரப்பட்டுள்ளது.
குறளை ஏழு சீர்களில் எளிமையாக வள்ளுவர் எழுதியுள்ளார். அது உலகம் எங்கும் பரவியுள்ளது. பத்து குறள்களின் கருத்தை எட்டு சீர்களில், பாங்குடன் விளக்கியுள்ளது. ஒரு குறள், ‘பிறன் பழிப்பது இல்லா, அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்கிறது. இதை ‘அயலாரின் பழிப்பு இன்றி அறம் சார்ந்து உய்ந்தால், அதுவன்றோ வாழ்க்கை’ என பொருளுரைக்கிறது.
புவியீர்ப்பு விசையை விடவும், காதலில் பால் ஈர்ப்பு விசை அதிகம் என இன்பத்துப்பாலை பருகத் தருகிறது. அதை, ‘படைக்களத்துள் ஈட்டிகட்குப் பயந்தேன் இல்லை, பழகியபோல் இவள் அழகில் பதைத்தேன்’ என விளக்குகிறது.
– முனைவர் மா.கி.ரமணன்