விடாமுயற்சியுடன் வாழ்ந்தால் மேன்மை நிலையை அடையலாம் என கூறும் நுால். தன்னை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் போது, வெற்றிக்கான இலக்கை எளிதாக அடைந்து விடலாம் என்ற கருத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
வாழ்வில் உயர சுயபரிசோனை செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். முதலில் நம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்; அப்போது தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் இலக்கை நோக்கி பயணித்து வெற்றிப்படியை எட்டிவிடலாம் என்கிறது.
திட்டமிட்டு உழைத்தால் வெற்றி உண்டு. சாதனைக்கு வயது வரம்பு கிடையாது. மனதில் திடம் இருந்தால் போதும்; வீழ்ந்தாலும் துவண்டுவிடாமல் ஆற்றலைத் திரட்டி போராடி வெற்றியை நிச்சயம் பெறலாம் என நம்பிக்கையூட்டும் நுால்.
– முகில்குமரன்