நாட்டுப்புற வாழ்க்கை சார்ந்த கருத்தோட்டங்கள் பொதிந்த நுால். பன்னோக்குள்ள தன்முனைப்பு சிந்தனைகள் நிறைந்துள்ளன.
இயல்பாக வாழ்வில் கண்ட புரிதல், அனுபவ தொகுப்பாக வலுசேர்க்கிறது. வயல்வெளி, பூக்கள் பற்றிய வர்ணனைகளில் கிராமத்துக்கே உரித்தான நறுமணம் கமழ்கிறது. கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லாத சூழலில் இயந்திரமாக உழைக்கும் பெண்கள் சார்ந்த உணர்ச்சி பதிவுகள் கவனத்தை ஈர்க்கின்றன.
அறியாமைகளுக்கு இடையில் குடும்பத்தை பேணி முன்னேற்ற பாதைக்கு செல்லும் பெண்களின் பொறுப்புணர்வு உள்ளபடி முன்வைக்கப்பட்டுள்ளது.
இலக்கியம் சார்ந்த கட்டுரைகளும் இடம்பெற்று வேறு தளத்தில் அசைபோட வைக்கின்றன. இலக்கியச் சுவையுள்ள நேர்காணல்களும் மிளிரும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு