ஆட்டிசம் குறைபாடுள்ள சிறுவனை மையப்படுத்தியுள்ள நாவல் நுால். அமெரிக்காவில் ஒரு சிறுவன் காணாமல் போன செய்தியை அடிப்படையாக்கி உருவாக்கப்பட்டுள்ளது.
ஆட்டிசம் பாதிப்புள்ளோருக்கு தகவல் தொடர்பில் உள்ள குறைபாடுகளை மையப்படுத்தி பின்னப்பட்டுள்ளது. இந்த குறைபாட்டை தீர்க்க மருந்து எதுவும் இல்லை; முறையான பயிற்சியே மேம்படுத்தும் என்கிறது. இதன் அடிப்படையில் விழிப்புணர்வு தருவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது.
காணாமல் போகும் சிறுவனுக்கு பசி, தாகம் போன்ற உணர்வுகளை கூட வெளிப்படுத்த தெரியாது. இந்த நிலையில் எந்த உதவியும் கோரத் தெரியாமல் நிர்க்கதியாக நிற்கும் நிலையை எடுத்து சொல்லி புரிய வைக்கிறது. ஆட்டிசம் குறைபாடுள்ளோர் காணாமல் போனால் ஏற்படும் பிரச்னையை மையப்படுத்திய நுால்.
– ராம்