ஆன்மிகம், வாழ்வு அனுபவங்கள், கேளிக்கை பற்றி கலவையான கருத்துகளை பகிரும் நுால். முகநுாலில் எழுதிய ஆக்கங்களைத் தொகுத்து தருகிறது.
சரஸ்வதி பூஜை கொண்டாட்ட சிறப்பு பற்றி சுவாரசியம் குன்றாமல் எடுத்துரைக்கிறது. துலா ஸ்நானமும் திருவானைக்கா பிரசாதமும், கார்த்திகை தீபமும் சொக்கப்பானையும் என, நிகழ்வுகளை விளக்குகிறது. குழந்தைகள் தினம், உலக கவிதை நாள் பற்றிய கண்ணோட்டமும் பதிவாகியுள்ளது.
புத்தகம், 43 துணைத் தலைப்புகளை உடையது. ஒன்றில் உள்ள எண்ணம் போல் மற்றொன்றில் இல்லை. ஒவ்வொன்றும் தனித்த சுவாரசியத்துடன் மிளிர்கின்றன. மாத, வார இதழ்களில் வெளியான ஆக்கங்களும் தொகுத்து தரப்பட்டுள்ளன. சுவாரசியம் மிக்க நுால்.
– ராம்