எழுச்சியூட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு கதையிலும் கதாபாத்திரங்கள் தெளிவான குறிக்கோளுடன் இலக்கு நோக்கி பயணிப்பது புலப்படுகிறது.
கதைகள் ஒவ்வொன்றும் சுவாரசியம் தருகின்றன. மாமரத்தை மனைவி போல் நேசிப்பவருக்கும், மாமரத்தை அப்புறப்படுத்த நினைக்கும் உறவினருக்குமான போராட்டத்தை உணர்ச்சி மிக்கதாக விவரிக்கிறது, ‘அம்மா’ என்ற கதை. இதன் முடிவு அதிர்ச்சி தருவதாக உள்ளது.
சில முற்றிலும் புதிய பார்வையோடு உள்ளன. மனிதர்களின் மனதை திருத்த எடுக்கும் முயற்சிகளை விவரிக்கிறது. மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற போராடும் கணவர் பற்றிய கதை மனதில் பதிகிறது. எளிய மனிதர்களை கொண்டு பெரிய செய்திகளை, எதிர்பாரா திருப்பங்களுடன் சொல்லும் கதைகளின் தொகுப்பு நுால்.
– ஊஞ்சல் பிரபு