தமிழில் இசை, நாடகத்தின் தொன்மை இலக்கணம் நுால்கள் பற்றி தக்க ஆதாரங்களுடன் குறிப்பிடும் நுால்.
உலகில் கவிதைக்குரிய மொழிகளாக தமிழ் மற்றும் கிரேக்கத்தை சான்றுகளோடு பதிவு செய்துள்ளது. கவிதையில் வள்ளலார் பாடிய, ‘சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன்; சாத்திர குப்பையும் தவிர்த்தேன்’ என்பது சிறப்பித்து கூறப்பட்டுள்ளது. கவிஞர் கண்ணதாசனை, கவியுலக கம்பன் என்று புகழ்கிறது.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடிய, ‘ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே; அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே’ என்ற தத்துவ பாடலை கலை உலகப் புரட்சி என போற்றுகிறது. சங்க இலக்கியமான கலித்தொகை விளக்கும் காதல் ஓவியத்தின் நளினமும் நவிலப்பட்டுள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்