செந்தமிழை செம்மொழியாக்க எடுத்த முயற்சிகள், நடத்திய போராட்டங்களை உள்ளத்தில் பதியும் வண்ணம் உணர்வுபூர்வமாய் எடுத்துரைக்கும் நுால்.
தமிழ், செம்மொழி என அரசு அறிவித்த வரலாற்றுச்செய்தியை மையமாக உடையது. செம்மொழிக்கு தகுதிகள் என்னென்ன வேண்டும் என்ற தகவல் உள்ளது. தமிழ் செம்மொழியாவதற்கு டில்லியில் நடந்த போராட்டம், மத்திய அரசின் கவனத்தை ஈர்த்தது காவியமாய் தீட்டி படைக்கப்பட்டுள்ளது.
டில்லி தமிழ்ச்சங்க பெருமைகள் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. செம்மொழியாக போற்றப்பட்டால் கிடைக்கக்கூடிய நன்மைகள் விரித்துரைக்கப்பட்டுள்ளன. போராட்டத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும் ஒளிவு மறைவின்றி பதிவிட்டுள்ள நுால்.
– டாக்டர் கார்முகிலோன்