புராணங்களில் சூரியனைப் பற்றி சொல்லப்பட்டுள்ள செய்திகளை தொகுத்து தரும் நுால். அறிவியல் பார்வையில் சூரியன் இயக்கத்தையும் எடுத்துரைக்கிறது.
விவரிக்க இயலாத ஆச்சரியம் நிறைந்தது சூரியன். புராணங்கள் பலவகையாக வர்ணித்துள்ளன. துதித்து போற்றியுள்ளன. உலகம் முழுதும் பல பெயர்களில் சூரியன் அழைக்கப்படுகிறது.
சூரியனின் செயல்பாடு, ஆற்றல்களை பல்வேறு விதமாக புராணங்கள் கூறுகின்றன. மரபு வழி தகவல்கள் தனித்துவமாக இடம் பெற்றுள்ளது. புராணத் தகவல்களின் அடிப்படையில் துவங்கி, அறிவியல் பார்வையுடன் முடிகிறது. மொத்தம், 16 தலைப்புகளில் தகவல்களை கொண்டுள்ளது. சூரியன் பற்றிய சிந்தனைகளின் தொகுப்பு நுால்.
– ஒளி