அகத்தில் அன்பு மலர்ந்தால் ஆனந்தமாக இருக்கலாம் என உணர்த்தும் புத்தகம்.
கதையின் தொடக்கத்தில் பார்கவி மகிழ்ச்சியாக இருக்கிறாள்; முடிவில் ஆனந்தமாக இருக்கிறாள். அந்த நிலைக்கு அழைத்து செல்வதே நோக்கம். ஒவ்வொரு கதாபாத்திரங்களும் பற்பல பாடங்களைக் கற்றுத் தருகிறது.
முதலாவதாக, ஊழியனாக இருந்தாலும் முதலாளியைத் தாயாக பாவித்து எந்த சூழ்நிலையிலும் உறுதுணையாக இருக்கும் தீபன். அடுத்ததாக, பதவியும் அதிகாரத்தையும் வைத்து பிறரின் செல்வத்தை கைப்பற்ற திட்டம் தீட்டும் தீயவர்கள் மத்தியில், அவ்விரண்டையும் சேவைக்காக பயன்படுத்தும் மணி. முடிவில் அன்பெனும் நோக்கத்திற்காக கைகோர்த்து ஆனந்தம் பூக்கும் தருணத்தை அனுபவிக்க வைக்கிறது.
– தி.க.நேத்ரா