கல்வியின் அடிப்படை நோக்கம் பற்றி புதிய சிந்தனையை தரும் நுால். நுட்பமாக கவனிப்பதே விழிப்புணர்வுக்கு சிறந்த வழி என்பதை விளக்குகிறது.
கற்பதற்கு, தெளிவுடன், கூர்மையாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது.
கல்வியில் சுதந்திர செயல்பாடு, ஒழுங்கு நடைமுறை போன்றவற்றின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டுள்ளது. சுதந்திரமாக கற்க, உள்ளத்தில் ஒழுங்கை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. அதுதான், வாழ்வுக்கு உதவும் அறிவு என கூறுகிறது.
ஒழுங்கு முறையை கடைப்பிடிப்பது தான் சுதந்திரத்தின் வேர் என்கிறது. வாழ்வதற்கு உதவும் அறிவு எப்போதும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்கிறது. புதிய சிந்தனை தரும் வகையில் மலர்ந்துள்ள நுால்.
– ஒளி