மகாபாரதத்தில் கர்ணனின் ஈகை, கெடுமனதை அலசி ஆராய்ந்துள்ள நுால். எதை பெற வந்தனரோ அதற்கும் மேலாக அள்ளிக் கொடுத்த கொடை வள்ளல் என எடுத்துரைக்கிறது.
துாது வந்த கண்ணனைக் கொல்ல முற்பட்டது; அரக்கு மாளிகையில் துரியோதனன் சதி செயலுக்கு உடந்தையாக இருந்தது பற்றி எல்லாம் சொல்கிறது. சூதில் தோற்ற பாண்டவர் மேலாடையை களையச் செய்தது; பாஞ்சாலி சேலையை களைய பணியாளுக்கு உத்தரவிட்டதை குறிப்பிடுகிறது.
குந்தியிடம், நாகக்கணையை ஒரு முறை மட்டுமே எய்வேன் என வரம் கொடுத்தது போன்றவை கெடுமனம் உடையவன் என கர்ணனை விவரிக்கிறது. தன்னை கொல்ல நினைத்த துருபதனுக்கு வில் வித்தை கற்றுக் கொடுத்த துரோணர் பெருந்தன்மையும் சுட்டப்பட்டுள்ளது. அரிய ஆய்வு நுால்.
– புலவர் சு.மதியழகன்