உண்மைக்கு நெருக்கமான சிறுகதைகளின் தொகுப்பு நுால். பெண்களை மையப்படுத்தி பெயரையே தலைப்பாக வைத்து கவனத்தை ஈர்க்கிறது.
குழந்தை திருமணம், இளவயது தாய்மை, கவுரவக் கொலை, பாலியல் சீண்டல்கள், கற்றல் குறைபாடு, செயல்படாத குடும்பங்கள் என பெண்கள் எதிர்கொள்ளும் சவால், பிரச்னையை மையப்படுத்தியுள்ளது.
சிறுகதைகளில் உடலும், உணர்வுமாக வெவ்வேறு காலக்கட்டத்தில் பயணம் நடக்கிறது. கதாபாத்திரங்கள் பேச்சியம்மாள், நளினி, சோலையம்மாளுக்கு நிகழும் முடிவு மனதை கனக்கச் செய்கிறது. கட்டமைக்கப்பட்ட சமுதாய மதிப்பீட்டுக்கும், பாலியல் வரையறைகளுக்கும் உட்பட்டே வளர்கின்றனர். துயரங்கள் முடிவுக்கு வர, சமுதாய மாற்றம் தான் ஒரே வழி என நிறுவும் நுால்.
– ஊஞ்சல் பிரபு