வீழ்ச்சியை சந்தித்த கணினி நிறுவனமான சத்யம் எப்படி உயிர்பெற்றது என்பதை விவரிக்கும் நுால்.
மோசடியில் சிக்கி பங்கு மதிப்பு இழந்ததை விவரிக்கிறது. ராமலிங்கராஜுவின் ஒப்புதல் வாக்குமூலம் ஏற்படுத்திய தாக்கத்தை கூறுகிறது. வங்கியில் இல்லாத வைப்பு நிதிக்கு, மோசடி கணக்கு காட்டிய விபரம் அதிர்ச்சியூட்டுகிறது.
புதிய நிர்வாக குழு நியமித்து நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல எடுத்த முயற்சியை கூறுகிறது. தணிக்கை அறிக்கை ஓட்டைகளை தோலுரிக்கிறது. ஊழியர்களுக்கு கிடைத்த மறுவாழ்வை கூறுகிறது. நீதிமன்றம் வழங்கிய தண்டனை, மோசடிக்கு பாடமாக அமைந்ததையும் கூறும் நுால்.
– டி.எஸ்.ராயன்