ராமாயணத்தில் சுந்தர காண்டம் படித்தால் துயரம் தீரும். அதுபோல் சனீசுவர தோஷங்கள் நீங்க நளபுராணம் படிக்க வேண்டும்.
மகாபாரதத்தில் தருமபுத்திரனுக்கு ஆறுதல் கூற நளன் கதையை சொல்கிறார் வேதவியாசர். இரண்டும் சூதாட்டத்தால் வாழ்வை இழந்து மீண்டதை கூறும்.
நளன் கதையை படித்தாலும், கேட்டாலும், எழுதினாலும்நவக்கிரகங்கள் துன்பம் தராது என்பது பக்தர்கள் நம்பிக்கை. சனிபகவானும் நெருங்காது. கலிபுருஷனும் அருகில் வராது. எந்த பாவங்களும் வாழ்வில் சேராது.
நல்ல நெறிகளைப் பின்பற்றி, அல்லல் இன்றி வாழ வழி சொல்கிறது நளபுராணம். திருநள்ளாறு தலப் பெருமையும், சனீசுவர வழிபாட்டு மகிமையும் இணைத்து சொல்லப்பட்டுள்ளன. சனியால் பாதிப்பு இல்லாமல் இருக்க படிக்க வேண்டிய பரிகார நுால்.
- – முனைவர் மா.கி.ரமணன்