மராத்தி மொழியில் யுகாந்த் என்ற நுால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தன் கதையை தானே கூறுதல் என்பதை, குழந்தைகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் பயிற்சி தருவர். அந்த பாணியில், மகாபாரதத்தில் பீஷ்மருடன் சம்பந்தப்பட்ட கங்கா, அம்பா, மத்ஸ்யகந்தா, சாந்தனு பற்றியும், சத்தியவதி, விதுரன், ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் சில பாத்திரங்கள் தலைப்பிலும் கதை சொல்லப்பட்டுள்ளது.
படிக்கப் படிக்க இனிக்கிறது. பகுதிக்கேற்ற ஓவியங்கள் அசத்தலாக உள்ளன. மகாபாரதத்தை திரைப்படமாகப் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. பீஷ்ம பிதாமகரின் அறியாத முகம் ஒன்றை அம்பலப்படுத்துகிறது. படித்தால் மலைத்துப் போக வைக்கும் நுால்.
– தி.செல்லப்பா