அம்பிகையின் பெருமைகளையும், அருளும் தன்மைகளையும் சொல்லும் நுால்.
மகாபாரதத்தில் பகவத்கீதை இருக்கிறது. அதுபோல் மார்க்கண்டேய புராணத்தில் 700 மந்திரங்களாக தேவியின் மஹாத்மியம் காணப்படுகிறது. அம்பிகையை சுலோகங்களால் போற்றி துயரங்களை மாற்றிக்கொள்ள வழிகாட்டுகிறது. தும்ரக்ஷன், மது, கைடபன், மகிஷன் போன்ற அரக்கர்களை துவம்சம் செய்து தர்மத்தைக் காத்தவள் தேவி.
தேவ, மோக, அசுர சக்திகளாக இருக்கும் மகா காளியை, பக்தி சிரத்தையுடன் அதிகாலை எழுந்து மகாமந்திர ஜபம் செய்தால், எல்லா நலமும் பெறலாம். தேவி மந்திர சுலோகங்கள் அப்படியே தமிழில் தரப் பட்டுள்ளதால், எளிதில் ஜபித்து அருள் பெற முடியும். அம்பிகையின் அருள் பெற உதவும் மந்திர நுால்.
-– முனைவர் மா.கி.ரமணன்