அரசியல் கட்சிகள் தோற்றம், தேர்தல் நடைமுறை பற்றிய நுால். சுதந்திரம் பெறுவதற்கு முன் துவங்கி, தற்போதைய நிலைவரை எடுத்துக் கூறுகிறது.
இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றத்தையும், அதற்கு உரிய காரணங்களையும் தெளிவாக்குகிறது. அக்கட்சியின் மாநாடுகள் குறித்தும் சுருக்கமாக அறியத்தருகிறது. தொடர்ந்து இந்தியாவில் அரசியல் கட்சிகளின் தோற்றம், அவற்றில் ஏற்பட்ட பிளவுகளை அறியத் தருகிறது.
கட்சிகளின் போக்கு அலசி ஆராயப்பட்டுள்ளது. அவற்றின் செயல்பாட்டுக்கு வகுக்கப்பட்ட விதிகள், அறம் சார்ந்த நடவடிக்கைகளை கேள்விக்கு உட்படுத்துகிறது. அரசியலை திறம்பட செயல்படுத்தியோர் விபரங்களையும் தரும் நுால்.
– மதி