புரிந்துகொள்ளும் வகையில் சுருக்கமாக தயாரிக்கப்பட்டுள்ள பகவத் கீதை உரை நுால்.
போரில் இரு அணிகள் எதிரெதிராக நின்றன. எதிரணியில் நிற்கும் குருவையும், உறவுகளையும் பார்த்து நடுங்கி, காண்டீபம் கை நழுவி அழுகிறான்அர்ச்சுனன். கலங்கிய அவன் மனதைத் தெளிய வைக்க கீதை உபதேசம் செய்கிறான் கண்ணன். இதை தத்துவ ஹித புருஷார்த்த உபதேசம் என தெளிவாக்குகிறது.
மறுபிறவி இல்லாத மோட்ச புருஷார்த்தமே ஜீவன் பெற வேண்டிய மேன்மை. இதைப் பெறுவதற்கான வழிகளே உபதேசமாக உள்ளது. ஆசையே எல்லா உயிர்களுக்கும் விரோதி. பாவம் குறைந்து, புண்ணியம் அதிகரித்தால் மோகத்தில் இருந்து விடுபடலாம் என உரைக்கிறது. பகவத் கீதைக்கு விசிஷ்டாத்வைத மரபுப்படி விளக்கம் தரும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்