திருத்தெளிச்சேரி சுயம்வர தபஸ்வினி கோவிலை மையமாக வைத்து, ஆன்மிக கருத்தை அறிமுகம் செய்யும் நுால். வழிபாட்டு மரபு நடைமுறைகளை தெளிவாக எடுத்துரைக்கிறது.
முன்னோர் பின்பற்றிய சிவ வழிபாடு, சிவாலயம் அமைப்பதில் கடைப்பிடிக்கும் நடைமுறைகள், தல பதிகத்தின் பொருள் விளக்கம், கோவில் சிறப்புகள் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளன. கோவிலில் முக்கிய விழாக்கள், சிறப்பு பூஜை நடக்கும் நாட்கள் விபரமும் தரப்பட்டுள்ளன.
நேரில் பார்த்தது, பலரிடம் கேட்டு அறிந்தது, புத்தகங்களில் வாசித்தது என பலவகையில் செய்திகள் திரட்டி தரப்பட்டுள்ளன. கோவில் சிற்பங்கள் பற்றிய தனிச் சிறப்புகள் விவரிக்கப்பட்டுள்ளன. திருக்கோவில் நடைமுறையை தெரிவிக்கும் ஆன்மிக நுால்.
– ஒளி