மாண்பு மிக்க ஆளுமைகளைப் போற்றும் மரபு கவிதைகளின் அணிவகுப்பாய் மலர்ந்துள்ள நுால். சுவாரசியங்களுடன் அமைந்துள்ளது.
மறைந்த விஞ்ஞானி அப்துல் கலாமை, ‘அறிவைக் கொண்டு ஆயுதம் செய்தாய்; அண்டம் கடந்தும் அன்பினை வென்றாய்’ என துவங்குகிறது. பெருந்தலைவர் காமராஜரை, ‘கற்றோர் வியந்திடும் கருணை மழை’ என போற்றி கவிமாலை சூட்டப்பட்டுள்ளது.
நெஞ்சு நெகிழும் இலங்கை தமிழர் இன்னலும், தந்தையின் பேரன்பும், தாயின் மகத்துவமும், இல்லாளின் மேன்மையும், காதலின் வாஞ்சையும், சொற்கட்டும் சத்தங்களும் நிறைந்த மரபுப் பாக்களாய் ஒளிர்கின்றன. மரபுக் கவிதை எழுத முயல்வோருக்கு இலக்கணமாய் திகழும் நுால்.
– புலவர் சு.மதியழகன்