சிந்தனையை உயர்த்துகிற சீர்மிகு கட்டுரைகளின் அணிவகுப்பு நுால். காலையில் மலர்ந்து மாலையில் மடியும் மலர்களை பற்றிய விளக்கம் சிறப்பாக தரப்பட்டுள்ளது.
பச்சைக்கிளி பற்றி ஆராய்ச்சி கட்டுரை ஒன்று உள்ளது. பழங்காலத்திலே இதை வீட்டில் வளர்த்திருப்பதை ஆதாரங்களுடன் தருகிறது. மவுரியப் பேரரசுக்கு அப்பெயர் வந்த காரணம் கூறப்பட்டு உள்ளது. பேரரசர் அசோகரின் சிறப்பு விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு, ஆபிரகாம் லிங்கன் அரும்பெரும் சேவை பற்றியும், மணிமேகலை காப்பியத்தின் தனிச்சிறப்பும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. சமதர்மமே மெய்யான விடுதலை என்று கூறும் நுால்.
– டாக்டர் கார்முகிலோன்