வைணவப் பெரியவர் ராமானுஜர் வாழ்க்கை சரித்திரம் கூறும் நுால். சாதித்தவற்றையும், சகித்துக் கொண்டவற்றையும் திறம்பட வர்ணிக்கிறது.
ஸ்ரீபெரும்புதுாரில் அவதாரம் பெற்று, திருக்கோஷ்டியூர் விமானத்தில் ஏறி உலகம் அறிய ‘அஷ்டாக்ஷர மந்திரம்’ சொன்னதும் மட்டும் தான் பலருக்கு தெரியும். அவரது போதனைகளையும், சாதனைகளையும் தெள்ளிய நீரோடை போல் வடித்து தருகிறது.
சூழ்நிலையால் மதுராந்தகம் பெருமாள் கோவிலில் பெரிய நம்பிகளை சந்திக்க நேர்ந்தது. அவர் வழியாக அங்கேயே ஆச்சாரியார் என அழைக்கப்படும் தகுதியைப் பெற்றதும் வியப்பு தருகிறது. ஸ்ரீரங்கம் கோவில் திருப்பணியால் நிலைத்து நிற்கும் பெருமை பெற்ற ராமானுஜர் வரலாறு படிக்க உள்ளம் பூரிக்கிறது.
– சீத்தலைச் சாத்தன்