வல்லிக் கண்ணனின் சமகால எழுத்தாளரின் 22 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நுால். இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்ப்பாட்டை சித்தரிக்கிறது.
நகைச்சுவை இழையோடும் கேள்வித் தொல்லை, லட்சிய தரிசனம், கதையின் கதை, நாகரிக பிச்சை போன்றவை குழாயடி சண்டையின் தீவிரத்தை வெளிப்படுத்துகின்றன. தீர விசாரிப்பதே மெய் என்பதை நிறுவுகின்றன.
அடுத்தவர் உழைப்பை சுவிகாரம் செய்வதை பற்றிய, ‘அஞ்ஞானிகள்’ கதை உட்பட அனைத்தும் இன்றைய காலவோட்டத்திற்கு ஈடுகொடுக்கின்றன. நிறைவாக இரு உருவக கதைகள் இடம் பெற்றுள்ளன. பிரபல எழுத்தாளர்கள் படைப்புகள் மீதான விமர்சனமும் உள்ளது. சமூக அநீதி, அவலங்களை எதிரொலிக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்