வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலம் காசி பற்றிய விரிவான தகவல்களை வழங்கும் நுால். ஆன்மிக முக்கியத்துவம், வரலாற்றுப் பின்னணியை விவரிக்கிறது.
காசியின் ஆன்மிக அடையாளங்களான விஸ்வநாதர் திருக்கோவில், கங்கை ஆற்றின் புனிதம், தீர்த்த யாத்திரையின் சிறப்புகள் விளக்கப்பட்டுள்ளன. பண்டைக் கால அரசர்களின் கட்டடக்கலை, முஸ்லிம் ஆட்சியாளர் தாக்கம், நவீன அரசியல் மாற்றங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
காசியில் தமிழ் அறிஞர்கள், பக்தர்கள் மற்றும் பாரம்பரிய தமிழ் குடும்பங்களின் உறவு பற்றி பேசுகிறது. காசியின் மகத்துவத்தை புரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய அரிய தொகுப்பு. திருத்தல யாத்திரை செய்ய விரும்புவோருக்கு வழிகாட்டி.
– இளங்கோவன்