தெய்வீக அனுபவங்களைப் பெற்ற மகான்களின் வாழ்க்கை வரலாறுகள் விவரிக்கப்பட்டுள்ள நுால். ஆழமான ஆன்மிகக் கருத்துகளை விளக்குவதுடன், தெய்வீக ஆளுமைகள் பற்றிய தகவல்களும் அடங்கியுள்ளன.
மகான்கள் அவ்வையார், அருணகிரிநாதர், அபிராமி பட்டர் ஆன்மிக அனுபவங்கள் நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளன. ஆன்மிகம், இறை நம்பிக்கை, தர்மத்தின் முக்கியத்துவம் அழகாக விளக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற மகான்கள் பற்றிய தகவல்களை அளிக்கிறது.
சில பகுதிகளில் மீண்டும் மீண்டும் ஒரே கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மனப்பான்மை கொண்டவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சாதாரண வாசகர்களும், ஆன்மிக ஆர்வலர்களும் ரசிக்கலாம்.
– இளங்கோவன்