ஆதிசங்கரர் சவுந்தரிய லஹரியையும், அபிராம பட்டரின் அபிராமி அந்தாதியையும் ஒப்பிட்டு எழுதியுள்ள அருமையான நுால்.
அம்பாளின் அழகை, அறிவு ஓடை, அறிவுக் கடல், அறிவுத் தடாகம் என்றெல்லாம் குறிக்காமல், அறிவு ஊற்று என்று சங்கரர் கூறுவதை விளக்குவது அருமை. அபிராமி பட்டரின் மறுபெயர் ரத்னகேட தீக் ஷிதர் கூறுவது ஆய்வுத்திறனுக்கு எடுத்துக் காட்டு.
இரண்டும் 100 பாடல்களை உடையது என்றும், வெவ்வேறு காலத்தில் பாடப்பட்ட போதும் ஒற்றுமையை உரைக்கிறது. உழைத்தல் என்பதற்கு வருந்துதல் என்ற பொருளும் உள்ளதைக் குறிப்பிடுகிறது. காலனை, சிவன் இடது காலால் உதைத்ததற்கு விளக்கம் சுவை தருகிறது. அம்பிகை பக்தர்களுக்கு உகந்த நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து