ஜாதகத்தால் ஏற்படும் விளைவுகளை சிறுகதைகள் வழியாக எடுத்தியம்பும் நுால். திடீர் பணக்காரராகி செல்வம், செல்வாக்கு சேர்வதற்கான கிரக நிலையையும் குறித்து சொல்கிறது.
புதன் ஆதிக்கம் பெற்றோர் நகைச்சுவையாக பேசுவர் என்கிறது. சந்திராஷ்டமம் இருக்கும் நாளில் கவனம் தேவை என்பது சிறு நிகழ்வுகள் வழியாக விளக்கப்பட்டுள்ளன. சூரியனும், சந்திரனும் கேந்திரத்தில் இருந்தால் முதல் தர ஜாதகம் என்கிறது.
நவகிரகங்கள் நிகழ்த்தும் திருமணம், நில புலன் வாங்குதல், உறவு மேம்படுதல், வாகன விபத்து, குழந்தை பாக்கியம், தொழில் லாபம், நஷ்டம் பற்றி கதைகள் வாயிலாக விளக்குகிறது. ஜோதிட ஐயங்களுக்கு கதை மற்றும் வினா – விடையாக விளக்கம் அளிக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்