நேர்மையான அரசியல்வாதி தலைவனானால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள நாவல் நுால். அரசியல்வாதி நேர்மையாக இருந்தால் சந்திக்கும் பிரச்னைகளையும் கூறியுள்ளது.
நேர்மையான அரசியல்வாதியாக வாழ்பவன், தன் தாத்தா தந்திரமாக கொல்லப்பட்ட நிலையில் புதிய அரசியலை கொண்டு வர நினைக்கிறான். அதற்காக கையாண்ட தந்திரங்கள், நல்ல அடித்தளமிட்டு அரசியலில் நுழைவது, பின்னர் அதிகாரத்தில் அமர்ந்து நல்ல ஆட்சியை கொடுப்பது என மாற்றம் வருகிறது.
கதையில் திருப்புமுனைகள் வைக்கப்பட்டுள்ளன. அரசியலில் இப்படியும் செய்யலாம் என்ற வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. சில கதாபாத்திரங்களை மட்டுமே பயன்படுத்தி கதையை சொல்லியுள்ள உத்தி சிறப்பானது.
– முகில்குமரன்