மன விகாரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல்.
‘தினமலர்’ நாளிதழ் வாரமலர் இதழில் தொடராக வந்து அமோக வரவேற்பை பெற்றது நுால் வடிவமாகியுள்ளது. பெண்மையை போற்றும் வகையில் உள்ளது.
படிப்பில் கவனம் செலுத்தி மருத்துவராகிய பெண், சமூகத்திலும், குடும்பத்திலும் வஞ்சிக்கப்படுவதை சுற்றி பின்னப்பட்டுள்ளது. ஆதிக்கம் நிறைந்த ஆணிடம் சிக்கியதால் படும் துயரங்களை யதார்த்தமாக விவரிக்கிறது.
அந்த பெண் கதாபாத்திரத்துக்கு உறவாக வரும் பெண்ணும் கயமைக்கு பலியாகும் கொடுமையை சித்தரிக்கிறது. எந்த பகுதியிலும் தொய்வு ஏற்படாத வகையில் பின்னப்பட்டுள்ளது. சுவாரசியம் குறையாத வண்ணம் உள்ளது. பிரபல இதழாளர் அந்துமணியின் சிறப்பான வாழ்த்துரையுடன் மலர்ந்து, விறுவிறுப்பு குன்றாமல் உள்ள நாவல் நுால்.
– ராம்