ராமாயணத்தின் முக்கிய சம்பவங்களை எளிய தமிழில், குழந்தைகள் மற்றும் இளம் வாசகர்கள் புரிந்துகொள்ளும் வகையில் வழங்கும் நுால். பாரதத்தின் முக்கிய இதிகாசமான ராமாயணக் கதையை சுருக்கமாக, ஆன்மிக விளக்கங்களுடன் தருகிறது.
கதாநாயகர்களின் பண்பு, நிகழ்வுகள் மற்றும் உணர்வுகளை உணர்ச்சிகரமாக விளக்குகிறது. பாரம்பரிய ராமாயணத்திலிருந்து விலகாமல், இளம் வாசகர்களுக்கு உகந்த வகையில் எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ளது.
கதாபாத்திரங்கள் வழியாக நீதிக்கதைகளாக வாழ்க்கை பாடங்களை வழங்குகிறது. ராமனின் பிறப்பு, சீதையுடன் திருமணம், வன வாசம், ராவணன் போர்க்களம், இறுதியில் ராமன் பட்டாபிஷேகம் என முக்கிய நிகழ்வுகள் தெளிவாக விவரிக்கப்படுகின்றன. கதை எளிமையாக சொல்லப்பட்டதால் குழந்தைகளும் விரும்பி வாசிக்க முடியும்.
இந்த புத்தகத்தில் உள்ள கருத்து ஆன்மிக சிந்தனைக்கு உதவுவதோடு, கதையின் மையக் கருத்தையும் விரிவாக அலசுகிறது. குறிப்பாக, தமிழ் மொழியில் ராமாயணத்தை அறிமுகப்படுத்துகிறது.
பழமையான கதைகளுக்கு புதிய முகம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றுகிறது. சுவாரசியமாக வாசிக்க ஏற்ற வகையில் உள்ளது.
சிறப்பான கதையமைப்பு, முரண்பாடற்ற விளக்கம் என தெளிவாக உள்ளது. பெரியவர்களுக்கும் வாசிக்க ஏற்ற வகையில் உள்ளது. புதிய சிந்தனைகளை உருவாக்கும். தமிழில்கதைகளை விரும்பும் அனைவருக்கும் அருமையான தொகுப்பு நுால்!
– இளங்கோவன்