பெண்களை மையமாகக் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
சமூகம் நிகழ்த்தும் வன்முறை, அழுத்தங்களை தாங்கி தாழ் பணியாமல் அன்பின் வழியே எதிர்கொள்ளும் தைரியசாலி பெண்கள் தான் கதையின் நாயகியர். ஆண், பெண் உறவில் இருக்கும் புதிரை, தகிக்கும் காதலை கவிதையாக வெளிப்படுத்துகிறது.
வஞ்சிக்கப்பட்டதற்கான புகார் இல்லாமல் இன்னொன்றை சுயமாக உருவாக்கிக் கொள்ளும் தன்னம்பிக்கை கொண்ட பெண்களை காட்டும், ‘ஆசை முகம் மறந்து போச்சே’ கதை ரசிக்க வைக்கிறது. மடந்தை துவங்கி பேரிளம் பெண் வரை, வெவ்வேறு பருவங்களில் பெண் வாழ்வு கதைகளாக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
– ஊஞ்சல் பிரபு