நாடகங்களில் பெண் கதாபாத்திரங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை விவரிக்கும் நுால்.
எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன் நாடகங்களில், பெண் கதாபாத்திரங்களின் நேர்மை, தன்னம்பிக்கையை வெளிக் கொண்டு வந்துள்ளது. புராண இதிகாச நாடகங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை பகிர்கிறது. சோதனை, துயரம், சார்புநிலை கொண்டுள்ளதை கூறுகிறது.
நவீன நாடகங்களில் பெண் துயரங்களை துடைக்கும் கதாபாத்திருங்கள் நிறைந்திருப்பதை சொல்கிறது. கல்வி, சம உரிமை பரவலாக ஒலிப்பதை கேட்க வைக்கிறது. வீதி நாடகம், மேடை நாடகம், தெருக்கூத்து, ஓரங்க நாடகத்தின் வேறுபாட்டை சொல்கிறது. நாடகம் பார்த்தபின் பெண்கள் மனநிலையில் ஏற்படும் மாற்றத்தை உரைப்பது போல் நேர்த்தியாக படைக்கப்பட்டுள்ள நுால்.
– டி.எஸ்.ராயன்