மனித உணர்வை படம் பிடித்து காட்டும் நுால்.
அம்மாவின் பேரன்பையும், அப்பாவின் கண்டிப்பையும், ‘காயங்கள் கொடுத்த கைகளே மருந்துமானது’ என அறிய தருகிறது. நெசவாளர் இழிநிலை குறித்து, ‘மானம் மறைக்க உணவு மறந்து உழைத்த தறியில் உடம்பில் இன்று எஞ்சி நிற்பது எலும்புக்கூடு’ என பதிவு செய்யப்பட்டுள்ளது.
படிமம், தொன்மம், குறியீடுகளாக காதல், இயற்கை, வறுமை, சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் குறித்து பாடப்பட்டுள்ளது. ‘தாகம் தீர்த்தக் காவிரியில் ஈரமில்லா வஞ்சகர்களின் கைவிரிப்பால் தேகம் வறண்டது’ என மணல் கொள்ளையால் நதிகள் வறண்ட அவலம் சித்தரிக்கப்பட்டுள்ளது. வாழ்வின் எதார்த்தம் பேசும் நுால்.
- – புலவர் சு.மதியழகன்