எப்படி ஜாதகம் பார்க்க வேண்டும் என்பதை எளிய முறையில் தரும் நுால்.
தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த குழந்தை முதலில் மூச்சு விட துவங்குவது தான் பிறந்த நேரம் என வரையறை செய்கிறது. முதல் மூச்சுக்கு அடையாளம் அதன் அழுகுரல். இதன்படி கணித்த ஜாதகம் மிகத் துல்லியமாக அமையும் என்கிறது.
குழந்தை பிறந்த நேரத்தில் நாழிகை கணக்கிடப்பட வேண்டும். அதை கணக்கிடும் முறையும் சொல்லப்பட்டுள்ளது. சரியாக கணித்தால் தான் நவாம்ச சக்கரம், சப்தாம்ச சக்கரம் நுணுக்கமாக போட முடியும் என்கிறது. வீடு, மோட்சம் என்று ஒவ்வொரு பாவத்திற்கும் தக்க பலன்கள் கணிப்பது பற்றி உரைக்கிறது. புதிதாக ஜாதகம் கற்பவர்களுக்கும், அனுபவ ஜோதிடர்களுக்கும் உதவும் புத்தகம்.
– சீத்தலைச் சாத்தன்