சென்னை மாகாணத்தில் இருந்து தனி மாநிலமாக தமிழகம் உருவான வரலாற்று தகவல்களை உடைய நுால். மொழிவாரி மாநிலம் அமைக்க நடந்த போராட்டங்களையும் சுருக்கமாக உரைக்கிறது.
தமிழகம் தனி மாநிலமாக உருவாக உழைத்த தலைவர்களின் பங்களிப்பை தெளிவாக எடுத்துரைக்கிறது. ராஜாஜி, காமராஜர், ம.பொ.சிவஞானம், நேசமணி என பல தலைவர்களின் செயல்பாடுகளும், உழைப்பும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மொழி வாரியாக மாநில அமைப்புக்கு நடந்த போராட்டங்களில் உயிர் தியாகம் செய்தோர் விபரங்களும், தகவல்களும் தரப்பட்டுள்ளன. மொழிவாரி மாநில கோரிக்கையை, அப்போதைய மத்திய அரசு எதிர்கொண்ட விதம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மொழிவாரி மாநிலங்கள் குறித்த ஆவண நுால்.
– மதி