ஜாதகத்தை ஒப்பிட்டு ஒவ்வொரு பாவத்திற்கும் உரிய பலன்களை ஆராய்ந்து கருத்துகளை முன்வைக்கும் நுால்.
ஜாதகத்தில் லக்னம் தான் முதலாக பார்க்க வேண்டும். அதிலிருந்து தான் மற்ற கோள்கள் இருக்கும் இடங்கள், அவை தரும் நன்மை தீமைகள் கணிக்கப்படுவதை கூறுகிறது. கோடீஸ்வர யோகம், உடல் உறவில் யாருக்கெல்லாம் ஆர்வம் இருக்கும் என்பது பற்றி உரைக்கிறது.
வீடு கட்டும் யோகம் யாருக்கு உண்டு என்பதையும் விவரிக்கிறது. விலை உயர்ந்த கார் இருந்தாலும் நடந்தே செல்லும் காரணம், சுவையான உணவு இருந்தபோதும் சாப்பிட முடியாமை போன்றவற்றை எடுத்துரைக்கிறது. கிரகம் மாறி இருப்பதால் ஏற்படும் பரிவர்த்தனை யோகம் விளக்கப்பட்டுள்ளது. ஜோதிடர்கள் விரும்பி படிக்க வேண்டிய புத்தகம்.
– சீத்தலைச் சாத்தன்