பேரண்டம் பற்றிய தகவல்களை தொகுத்து தரும் நுால். பிங்பாங் கோட்பாட்டை விளக்குகிறது.
பழங்கால மக்கள் விண்வெளியைக் கூர்ந்து சமிக்ஞைகள், குறியீடுகள் அடிப்படையில் வாழ்க்கை நடைமுறைகள் மேற்கொண்டதைக் கூறுகிறது. வான்வெளி மாற்றங்களை ஆய்ந்து கடவுளை உருவகித்ததாகச் சுட்டுகிறது.
மத்திய அமெரிக்காவில் வாழ்ந்த இனம் ஆண்டுக்கு 365 நாட்கள் என்று கண்டறிந்ததை அரிதான தகவலாக பதிவு செய்கிறது.
விண்மீன் கண்காணிப்பின் விளைவாகவே ஜோதிடம் தோன்றியதாக கூறுகிறது. பேரண்டத்தின் வடிவம், கருத்தியல்கள், உள்ளடங்கிய வாயுக்கள், துாசு, எரிகற்கள், உயிரினங்கள் பற்றிய தகவல்கள் சுவைபட தரப்பட்டுள்ளன.
பேரண்டத்தைப் பற்றிய அடிப்படை புரிதலைத் தரும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு