திருவண்ணாமலை அருணகிரி நாதர் விழாவில் கிருபானந்த வாரியார் தவறாமல் பங்கேற்ற விபரத்தை விவரிக்கும் நுால்.
வாரியாரின் தந்தை மல்லையாதாசர் சிறந்த சொற்பொழிவாளர் என்ற தகவலுடன் துவங்குகிறது. வாரியாரின் பிறப்பு, இளமை பருவம் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது. தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில், 40 நாட்கள் வாரியார் ஆற்றிய ராமாயணச் சொற்பொழிவு பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதா, பாவேந்தர், கல்கி மற்றும் சிந்தனையாளர்களுடன், வாரியார் கொண்டிருந்த நட்பையும், தொடர்பையும் தெளிவுபடுத்தியுள்ளது. வாரியாரை அருள் வள்ளலாகக் காட்டுகிறது. வாரியார் புகழைப் பரப்பியோர் குறிப்புகளையும் வழங்கி விருந்தளிக்கிறது இந்த நுால்.
– முகிலை ராசபாண்டியன்