மின்சாரப் பயன்பாடு பற்றிய விபரங்களை சொல்லும் தகவல் களஞ்சிய நுால். மின் சேவை விபரங்களை முழுமையாகச் சொல்கிறது.
மின் நுகர்வோர் குறை தீர்க்கும் அமைப்பின் முகவரி தரப்பட்டுள்ளது. எவ்வாறு மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது, தற்காலிக, நிரந்தர மின் இணைப்பு பெறுவது எப்படி, வணிக மின் இணைப்பு அளவீடு போன்றவற்றுக்கு தக்கவாறு விடை தருகிறது.
மின் வாரியத்தில் வேலைவாய்ப்பு, அதற்கு உரிய தகுதிகள், மின் நுகர்வோர் குறைதீர் மன்றத்தை அணுக வேண்டிய விதம் பற்றி எடுத்துரைக்கிறது. மின் இணைப்பு பெற விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள், பெயர் மாற்றம் செய்வது போன்ற விபரங்கள் தரப்பட்டுள்ளன. மின்சாரத்தை கையாள உதவும் முழுமையான கையேடு நுால்.
-– முனைவர் மா.கி.ரமணன்