புவி தோன்றியதில் இருந்து, முதல் உலகப்போர் வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை தொகுத்து தரும் நுால்.
உலகில் உயிரினங்கள் தோன்றி வளர்ந்தது, பேரரசுகளின் எழுச்சி, வீழ்ச்சி, மண்ணில் புதையுண்ட பெருநகரங்கள், அழிந்த நாகரிக விபரங்கள் கதைபோல் சொல்லப்பட்டுள்ளன. பெருமதங்களை தோற்றுவித்த புத்தர், இயேசு வாழ்ந்த போது நிகழ்ந்தவை குறித்தும் கூறப்பட்டுள்ளன.
ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், பவுத்த மதங்கள் உலகில் நிலைபெற்று வளர்ந்த விதம் பற்றி எடுத்துரைக்கிறது. கலை, இலக்கியம், பண்பாடு, அறிவியல், தத்துவங்கள் உலகில் ஏற்படுத்திய மாற்றங்களை புலப்படுத்துகிறது. உலகம் பற்றிய பார்வையை விரிவாக்கிக் கொள்ளும் வகையில் தகவல்கள் அமைந்துள்ளன. எளிய நடையில் அமைந்த அறிவு நுால்.
– ராம்