சித்தர்கள், யோகியர் போற்றப்பட்டதை எடுத்து கூறும் நுால்.
தன்னை அறிய, உணர, புரிய உதவுவது தியானம். முழு மனதோடு எண்ணம் ஒன்று, அதே சிந்தனையில் இருந்தால் கிடைக்க வாய்ப்பு உண்டு என எடுத்துரைக்கிறது. இது, காக்கை உட்கார பழம் விழும் கதை அல்ல; உண்மையாக நடக்கும் என வலியுறுத்துகிறது.
மனத்திரையில் எந்தெந்த நிகழ்ச்சிகளை உருவாக்கி சிந்தித்து மகிழ்கிறோமோ அது நடக்கிறது; அதுவாகவே ஆகிறது. இது தான் பிரபஞ்ச சக்தியை கொண்டு வரும் சித்து விளையாடல் என்கிறது. அதிர்ஷ்ட தேவதையை வரவழைக்க எந்த தியானம் உதவும் என்பதற்கு விடை கூறுகிறது. ஆழ்ந்து சிந்தித்து படிக்க வேண்டிய புத்தகம்.
– சீத்தலைச்சாத்தன்