விறுவிறுப்புடன் அமைந்துள்ள நாவல் நுால்.
ஒரு சாலை விபத்தில், காதலன் அஜய் இறக்கிறான்; காதலி மாயா உயிர் பிழைக்கிறாள். திருமணத்திற்கு முன் கர்ப்பமுற்றவர் கருக்கலைப்புக்கு மறுக்கிறாள். சந்தியா என்ற பெயருள்ள குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். குழந்தை ஆசிரமத்தில் வளர, மாயாவுக்கு மறுமணம் நடக்கிறது. அங்கு மகனை பெற்றெடுக்கிறாள்.
கோடீஸ்வரனான அஜய் உடல் பதப்படுத்தப்பட்டு வெளிநாட்டில் பாதுகாக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு பின் அறிவியல் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்து மீண்டும் அவன் உயிர் பெறுவதாக விறுவிறுப்புடன் நகர்கிறது. விதி வசத்தால் மீண்டும் காதலியை சந்தித்து விசித்திரமான உறவு ஏற்படுகிறது. சண்டை, விமான விபத்து என பரபரப்புடன் அமைந்துள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்